இலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 26, 2021

இலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை!

 இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.


பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 741 பேருக்கும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.


அவர்களில் 51 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  8 ஆயிரத்து 588 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேவேளை, நாட்டில் மேலும் ஒரு கொவிட்19 மரணம் நேற்று பதிவாகியது. இதன்படி நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளன.


இராகமை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண், வெலிசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து அவர் அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு நேற்று உயிரிழந்தார்.


அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா நிலை, குருதி விஷமானமை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.