வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்று சாவடைந்துள்ளார்.
பாபு (49) என்பவரே உயிரிழந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியிருந்தார்.
படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
இவர் வவுனியா நகரசபையில் சாரதியாக பணிபுரிகிறார்.
அவரது மரணம் தொடர்பாக இறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.