மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுட்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் மீது இனம்தெரியாத நபர்கள் 20 பேர் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வாளினால் வெட்டி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
களுமுந்தன்வெளியை சேர்ந்த 20பேர் கொண்ட குழுவினர் தான் இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுளதாக தாக்குதலுக்குள்ளான நபர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய ஐவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளைளர்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், குறித்த சந்தேக நபர்கள் பொலிசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு மறைந்துள்ளனர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்