விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

 திருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவதேஷ் என்பவருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் திருமணம் நடக்கவிருந்தது. அப்பொழுது மணப்பெண் ஆர்த்தி திருமணத்திற்காக அலங்காரம் செய்து புதிய ஆடை அணிந்து திருமணம் நடக்கும் இடத்திற்குக் கிளம்பிச் சென்றார்.


அவர் ஒரு இடத்தில் மாடிப்படியில் ஏறிக்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை படியிலிருந்து தவறி விழுந்தது. அந்த குழந்தையைக் காப்பாற்ற முற்பட்ட ஆர்த்தியும் மாடிப்படியிலிருந்து நிலை தவறி விழுந்தார். இதனால் இவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்திலிருந்த உறவினர்கள் ஆர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்த்திக்கு முதுகெலும்பில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்குப் படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும். காயங்கள் ஆறினால் தான் அடுத்து என்னவென சொல்ல முடியும். இது நிரந்தர பாதிப்பாகக் கூட மாறலாம் எனச் சொன்னார்கள். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது மகளுக்கு தற்போது திருமணம் ஆவது நடக்காத காரியம் எனக் கருதினர்.


இதனால் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு கொண்ட பெண் வீட்டார் நடந்த விபரங்களைக் கூறி ஆர்த்தியின் தங்கையை நாங்கள் தற்போது திருமணம் செய்து தருகிறோம், அதற்கு உங்களுக்குச் சம்மதமா எனக் கேட்டனர். மணமகனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதும் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆர்த்தியைச் சந்தித்தார். பின்னர் ஆர்த்தியின் பெற்றோரிடம் தான் ஆர்த்தியையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அவர் எந்த நிலையிலிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


பின்னர் மருத்துவமனையிலிருந்து ஸ்டெக்சர் மூலம் திருமண மண்டபத்திற்குச் சென்ற ஆர்த்திக்குக் குறித்த நேரத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான படிவத்தில் அவதேஷே கணவன் எனக் கையெழுத்திட்டார்.


திருமண நேரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக் காயமடைந்த மணப்பெண்ணின் திருமணம் நின்றுவிடும் என அனைவரும் நினைத்த நிலையில் மணமகன் அந்த பெண்ணையே குறித்த நேரத்தில் திருமணம் செய்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மணமகனின் இந்த செயலை பலர் தற்போது சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றன