மினுவாங்கொடை – ஒபான பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன், மனைவியின் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதன் பின்னர் தாமும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
சம்பவத்தில் சடங்களாக மீட்கப்பட்டுள்ள கணவருக்கு 45 வயது எனவும் மனைவிக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இரு புதல்விகள் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.