சற்றுமுன் மேலும் 632 தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 12, 2020

சற்றுமுன் மேலும் 632 தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியது

 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 632 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


பேலியகொடை கொரோனா கொத்தணியை சேர்ந்த 551 பேர் மற்றும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 81 பேர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.