யாழிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 6, 2020

யாழிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு சென்றவர்கள் தென் தமிழீழம் , திருகோணமலையை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

குறித்த மூவரும் படகு மூலம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் சவுக்கு காட்டில் வந்து இறக்கிய நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது