யாழ் ஆயர் இல்லத்திற்கு முன் தீபமேற்ற முயன்ற அருட்தந்தை திடீர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 27, 2020

யாழ் ஆயர் இல்லத்திற்கு முன் தீபமேற்ற முயன்ற அருட்தந்தை திடீர் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் சிறிய குருமட அதிபராவார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.