மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்து மூவர் உடல் கருகி பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 27, 2020

மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்து மூவர் உடல் கருகி பலி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்தது.


இந்த தீவிபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுச்சாலையில் இன்று ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது.

இதன்போது ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் உள்ள நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியது.

இதனால், பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இந்நிலையில் பஸ்சின் மேற்பரப்பில் தீ பற்றியதை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார்.

இதன் காரணமாக மளமளவென பரவிய தீ பஸ் முழுவதும் எரிந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.