இளைஞனுடன் விடுதியில் தங்கிய திருமணமான தமிழ்பெண்ணுக்கு நேர்ந்த கதி: இளைஞனிற்கு விளக்கமறியல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 17, 2020

இளைஞனுடன் விடுதியில் தங்கிய திருமணமான தமிழ்பெண்ணுக்கு நேர்ந்த கதி: இளைஞனிற்கு விளக்கமறியல்!

பொலன்னறுவ நகரிற்கு அண்மையிலுள்ள சுற்றுலா விடுதியில் திருமணமான தமிழ் பெண்ணொருவரை கழுத்து நெரித்து கொன்ற சந்தேகநபரை இம்மாம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதிவான் தேவிகா ஸ்ரீ ஜெயவர்தன உத்தரவிட்டுள்ளார்.பங்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபர், பொலன்னறுவை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

507/220, அத்தநாகடவல, பக்கமுன என்ற முகவரியை சேர்ந்த ரத்நாயக்க முதியன்சல சாமிந்த சதுரங்க (25) என்ற சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செருடண்டபொல, நவுல பிரதேசத்தை சேர்ந்த எம்.எம்.கமலா ரஞ்சனி (41) என்ற பெண்ணே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12.11.2020 அன்று சுற்றுலா விடுதியில் கொலை நடந்தது. இருவரும் முறையற்ற உறவை கொண்டிருந்தனர். விடுதியில் தங்கியிருந்த போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.