நாட்டில் இன்று மேலும் 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 17,831 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். இதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,327 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 404 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,210 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 54 மருத்துவமனைகளில் 5,560 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 516 பேர் கொரோனா சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.