உடுவிலில் 9 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில், சங்குவேலி பகுதியை சேர்ந்த சிறுமியே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 9 வயது சிறுமி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.