இன்றைய தினம் இலங்கையில் 178 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 30, 2020

இன்றைய தினம் இலங்கையில் 178 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி!

 இன்றைய தினம் இலங்கையில் 178 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


புதியதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் அனைவரும், கொவிட் நோயாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என்றும் அவர் கூறினார்.

இதன்படி இலங்கையில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,662 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 558 பேர் குணமடைந்தனர்.

சுகாதார மேம்பாட்டு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 17,560 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா நோயாளர்கள் 3 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மொரொன்துடுவ மற்றும் மில்லினிய காவற்துறை நிலையங்களில் சேவையாற்றிய 80 பேர் தனிமைப்புடுத்தப்பட்டுள்ளனர்.