குறித்த திகதியில் உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறுமா? - கல்வி அமைச்சு வழங்கியுள்ள வெளியான விசேட செய்தி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, October 7, 2020

குறித்த திகதியில் உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறுமா? - கல்வி அமைச்சு வழங்கியுள்ள வெளியான விசேட செய்தி

 ஏலவே அறிவிக்கப்பட்டபடி, கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை என்பன முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெறுகின்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதன்படி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதோடு, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.