நல்லூர் பிரதேசத்தில் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் சிக்கினர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 18, 2020

நல்லூர் பிரதேசத்தில் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் சிக்கினர்!

 நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர்பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் திருட்டுப் பொருள்களான 15 மின்விசிறிகள், 2 நீர்பம்பி மோட்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ரைஸ் குக்கர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர்கள் இருவரே இவ்வாறு நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நல்லூர் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் குடியிருப்பார்கள் இல்லாத வேளையில் திருட்டுச் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையிலேயே 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தக நபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.