மட்டக்களப்பில் விபத்து: இருவர் படுகாயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 18, 2020

மட்டக்களப்பில் விபத்து: இருவர் படுகாயம்

 மட்டக்களப்பு- செட்டிபாளையத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரவதாவது, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வழிப்பாதையூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்ததுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தின்போது காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பேருந்தின் பின் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து  தொடர்பான மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.