ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனையை வழங்குங்கள் – பொன்சேகா பகீர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 2, 2020

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனையை வழங்குங்கள் – பொன்சேகா பகீர்

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



கம்பஹாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பேசுவதானால் அதன் பொறுப்பை, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்க வேண்டும்.


அமைச்சரவையில் இருந்தாலும் அனைவருக்கும் அதில் தலையிட முடியாது. அவர்கள் இருவருக்கும் தான் அந்த பொறுப்பு உள்ளது. தோல்வி ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்பது அனைவராலும் தலையிடக்கூடிய ஒன்றல்ல.


அமைச்சரவையில் இருக்கும் போது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் தான் பாதுகாப்பு குறித்து பேச முடியும். எனக்கு இருந்தது வனவிலங்கு.


எனது பொறுப்பாக இருந்தது வனவிலங்கு குறித்த பேசுவது. தனிப்பட்ட முறையில் நாம் அவர்களுக்கு பேசி உள்ளோம். உத்தியோகபூர்வமாக பேச முடியாது.


எனினும் நாம் கூறிய விடயங்களை ஒருபோதும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. பாரியளவில் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. பயங்கரவாதம் உருவாகியது. கட்டாயமாக குறித்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.