வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் கடை திறந்திருந்தமை தொடர்பாக அவரிடம் கேட்டபோது,
பொலிஸாரின் தலையீட்டின் காரணமாகவே கடையை திறந்ததாகவும் பின்னர் 9.30 மணியளவில் தான் கடையை மூடியதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் வவுனியாவில் ஒரு சில வர்த்தக நிலையங்களை தவிர அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.