யாழில் இன்றைய தினம் 240 பேருக்கு PCR பரிசோதனைகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 11, 2020

யாழில் இன்றைய தினம் 240 பேருக்கு PCR பரிசோதனைகள்!

 யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் இன்றைய தினம் 240 பேருக்கு கொவிட் 19க்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நேற்றைய தினம் மன்னாரில் கொவிட் 19 தொற்றுறுதியான 5 பேரும் முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனால் ஏனையவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் தீவக பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர், பெரியகடை மற்றும் பட்டிதோட்டம் பகுதியில் அதிக தொடர்பினை பேணியுள்ளதால்; அவருடன்; தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொற்றுறுதியானவர் மன்னார் ஆயர் இல்லத்தின் பின் பகுதியில் கட்டுமான பனியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அத்துடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

அதேநேரம்; மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன் ஏனைய தொடர்புகளை முடிந்த அளவிற்கு தவிர்குமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இதேவேளை, சுகாதார நடைமுறைகளை இருக்கமாக பின்பற்றுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் அறுவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 105 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது.

இந்தநிலையில், திவுலுப்பிட்டிய கொத்தணியில் பதிவான கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆகும்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில்; சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அதேநரம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள குறித்த 18 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள சதோச பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட திறக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தில் 18 காவல்துறை பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில், சதோச, பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.