கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மேலும் இரண்டு நபர்கள் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தை முழுவதுமாக மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று முதலீட்டு ஊக்குவிப்பு சபை தெரிவித்துள்ளது
அனைத்து தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்குள்ள தொழிற்சாலைகளை இயக்கும் போது கடுமையான சுகாதார நெறிமுறையைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டு வலயத்திற்குள் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள 4 ஆடைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.