நீர் வீழ்ச்சி ஒன்றில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 16, 2020

நீர் வீழ்ச்சி ஒன்றில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்!

 ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்ட பகுதியில் உள்ள கிளை ஆறு ஒன்றின் நீர் வீழ்ச்சி ஒன்றில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞன் ஒருவனை ஹட்டன் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

இன்று (16) காலை குறித்த இளைஞன் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவலை ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக வீட்டில் தெரிவித்து விட்டு குறித்த நீர்வீழ்ச்சிக்க வந்து கல் ஏறி நின்றுக் கொண்டிருந்த போது

பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் இளைஞனை மடக்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட இளைஞனை ஹட்டன் பொலிஸார் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி குறித்த இளைஞன்

மனநோயினால் பாதிக்கபட்டவரா என அறிந்து கொள்ள நீதிமன்ற அனுமதியினை நாட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.