அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 16, 2020

அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை?

 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. “அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார்.

ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டுதள்ளிப்போகும் என தெரியவந்து உள்ளது.