போதையில் மகனை அடித்து கொன்ற தந்தை! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 13, 2020

போதையில் மகனை அடித்து கொன்ற தந்தை!


சப்புகஸ்கந்த பகுதியில் தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே இந்த மோதல் சம்பவம் ஏற்ப்ட்டதாக காவல் துறை அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதான நபர் என்பதுடன், 59 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.