பிரித்தானியாவில் இருந்து ரீ- சைக்கிளிங் (திருப்பி பாவிக்க கூடிய பொருட்கள்) என்ற போர்வையில், 22 கண்டேனர்கள் சென்றுள்ளது.
இதனை இலங்கையில் உள்ள கம்பெனி ஒன்று இறக்குமதி செய்து வருகிறது. அதில் கம்பளங்கள் தொடக்கம் உடைந்த கதிரை மேசை என்று பல பொருட்கள் அடங்கும். ஆனால் இம் முறை வந்த அந்த கண்டேனர்களில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மருத்துவ கழிவுப் பொருட்களும் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
இதனை கண்டு பிடித்த சுங்க அதிகாரிகள் பெரும் விசாரணையில் இறங்கியுள்ளார்கள். ஏன் எனில் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் அணு உலைகளின் கழிவுகளை, மற்றும் மருத்துவக் கழிவுகளை தமது நாட்டில் வெட்டிப் புதைப்பது இல்லை. அவற்றை வேறு நாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். இதற்கு அன் நாடுகள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வருகிறார்கள். இலங்கைக்குள் ரீ- சைக்கிளிங் பொருட்களை, இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில், மருத்துவ கழிவை கொண்டு வந்து கொட்டி, அதனை இலங்கையில் புதைத்து வருகிறார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இந்த 22 கண்டேனர்களையும் உடனே திருப்பி அனுப்பும் படி, இலங்கை கட்டளையிட்டுள்ளது. இதேவேளை கடந்த 3 ஆண்டுகளில் 272 கண்டேனர்களை இது போல இலங்கை அரசு திப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.