லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தினை தொடர்ந்து அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவைப்படும் எந்தவொரு கோரிக்கை மற்றும் உதவிகளுக்காக தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு இந்த சம்பவத்தில் இலங்கையர் இருவர் காயமடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இலங்கை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது