பாணந்துறை கடற்கரையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 2, 2020

பாணந்துறை கடற்கரையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி!

பாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தீவிர முயற்சியில் பிரதான சந்தேக நபர் வாதுவ வடக்கு தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று கைது செய்ய்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்கே நபரிடம் இருந்து இரண்டு கத்திகளும் கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை 17 வயதுடைய காதல் ஜோடி, கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த சந்தேக நபர் முதலில் இந்த ஜோடியை அச்சுறுத்தி பணம் கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் காதலனுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி மரண அச்சுத்தல் விடுத்து அவருக்கு முன்னாலேயே காதலியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்