சுமந்திரன்,சிறிதரன்,சம்பந்தனை நிராகரியுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 2, 2020

சுமந்திரன்,சிறிதரன்,சம்பந்தனை நிராகரியுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்


சுமந்திரன்,சிறிதரன்,சம்பந்தனை நிராகரியுங்கள் என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இன்னும் மூன்று நாட்களில் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி 11 வருடங்களுக்கும் மேலாக அலைந்து திரிந்தும்இ போராடியும் மனம்சோர்வடைந்து, விரக்தி நிலையில் உள்ளோம். அதற்குக் காரணம் என்ன? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை. எமது காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இராணுவம், அரச புலனாய்வாளர்கள் எமது இயல்பு வாழ்வை சீர்குலைக்கின்றார்கள். இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரித்தே செல்கின்றது. புதிது புதிதாக விகாரைகள் முளைக்கின்றன. மகாவலி அபிவிருத்திஇ தொல்பொருள்பிரதேசம், புனித பிரதேசம் போன்ற சாட்டுகள் கூறி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் நடந்தேறுகிறது.

எமது இளஞ்சந்ததியினர் திட்டமிட்டு போதைக்கும் மதுவுக்கும் அடிமையாக் கப்படுகின்றனர். எமது தாயக பிரதேசத்தில் இளஞ் சமுதாயத்தின் கல்வி திட்டமிட வகையில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுள்ளது. எமது வரலாறுஇ பண்பாடுஇ கலைஇ கலாச்சாரம் திரிபுபடுத்தப்பட்டும்இ மழுங்கடிக்கப்பட்டும் மறக்கடிப்பிக்கப்படுகிறது.

இந்த அவல நிலை தொடர வேண்டுமா? அல்லது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமா? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் ஆம் உறவுகளே!

இந்தளவு விடயங்களும் நடைபெறுவதற்கு மறைமுகமாகவும்,வெளிப்படையாகவும், தமது ஆதரவைக் கொடுத்த நாம் தெரிவு செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை இத் தேர்தலில் தெரிவு செய்வதை புறக்கணித்து, தமிழ் தேசியத்தின் பால் கொள்கை பற்றுறுதி புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் மேலே குறிப்பிட்டவர்களை புறந்தள்ளுவோம்.

அப்போதுதான் புதியவர்களுக்கும் ஒரு பயம் வரும் தாம் மக்களின் அபிலாசைகளுக்காக உழைக்காவிடின் தூக்கி எறியப்பட்டு விடுவோம் என்று. கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலத்த எதிர்பார்ப்புடன்அனுப்பி வைத்தோம். அவர்கள்சாதித்தது என்ன? கொஞ்சம் எஞ்சியிருந்த எமது உரிமைகளையும் கூட சிங்களத்துக்கு அடகு வைத்து தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொண்டதுதான் மிச்சம்.

நாவற்குழியில் புத்த விகாரை கட்டுவதற்கு வசதியாக ஏற்கனவே நீதிமன்றத்தால் போடப்பட்ட தடையுத்தரவை மீளப்பெற்று வழி சமைத்துக் கொடுத்தார்கள். அத்துடன் வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்களில் குடியேறிய சிங்களவர்களுக்கு காணி உறுதி வழங்கும் அரச நிகழ்வில் முண்டியடித்துக்கொண்டு பங்குபற்றி எமது காணிகளை தாரைவார்த்துக் கொடுத்தார்கள். இவ்வாறு நிறையவே தமிழின துரோக விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழரையும் தமிழையும் கொச்சைப்படுத்தும், சிங்களவர்களுடன் வாழ்வதைப் பாக்கியமாகக்கருதும் சுமந்திரன்,அவரை நியாயப்படுத்தும் சிறிதரன், இவர்கள் இருவர் மீதும்நடவடிக்கை எடுக்காது அவர்களை இன்னமும் முதன்மைப்படுத்தும் கூட்டமைப்பின் தலைமை ஆகிய இவர்களை பாராளுமன்றம்செல்ல நாம்அனுமதித்தால் தேசியத்தை நேசித்த அத்தனை மாவீரர்களுக்கும் அதன் பொருட்டு உயிர்நீத்த பொதுமக்களுக்கும் நாம் செய்யும் துரோகமல்லவா? எனவே இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

அதுமட்டுமல்லஇ எமது பிரதேசத்தில் சிங்களக்கட்சிகள்இ தம் கைக்கூலிகளை தமது சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களக்கட்சிகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள்இ இனச்சுத்திகரிப்பு என்பவற்றை எப்படி எம்மால் மறக்க முடியும்? மறக்கவும் முடியாது. மன்னிக்கவும்முடியாது.

எனவே இவர்கள் எல்லோரையும் இனிவருங்காலங்களில் எமது பிரதேசங்களில் போட்டியிடும் எண்ணமே வராத அளவுக்கு படுதோல்வியடையச் செய்ய வேண்டும்.மேலும் சிங்களக் தேசிய கட்சிகளுடனும், சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுக்கும், சுயாட்சைகளுக்கும் நீங்கள் எலும்புத்துண்டுக்கு வாலாட்டுபவர்கள் அல்ல உணர்வுள்ளஇ மானமுள்ள தமிழர்கள் என்பதைப் வடக்கு கிழக்கு எங்கிலும் புரிய வைக்க வேண்டும்.

ஆகவே, தமிழ் தேசியத்தை விசுவாசத்துடன் நேசிப்பவர்களுக்கும், “எமக்கு நடந்தது இனப்படுகொலை” என அடித்துச் சொல்பவர்களுக்கும்இ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதே விசாரணையே தேவை என கோரும் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். அக்கட்சிகளில் உள்ள பண்பாளர்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடியவர்கள் என உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுபவர்கள் மூவருக்கு உங்கள் விருப்பு வாக்கை அளியுங்கள்.

தயவு செய்து கடந்த காலத்தில் பெற்ற கசப்பான அனுபவத்தால் விரக்தியடைந்தோ அல்லது சலிப்படைந்தோ வாக்களிக்கச் செல்லாது விடவேண்டாம். உங்கள் ஒரு வாக்கால் கூட எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானிக்கப்படலாம்.

எனவே வருகிற 5ம் திகதி அதிகாலையில் தமிழ் மண்ணுக்காய் உயிர் நீத்தவர்களை நெஞ்சில் நிறுத்தி தேசியத்தை உளமார நேசிப்பவர்களுக்கும்இ அவர்கள் சார்ந்த கட்சிக்கும் புள்ளடி இட்டு அவர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டுமென்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் உங்களை வேண்டி நிற்கின்றோம். என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது