நடு வீதியில் யுவதியை கழுத்தறுத்து கொன்று விட்டு நஞ்சருந்திய காதலன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 24, 2020

நடு வீதியில் யுவதியை கழுத்தறுத்து கொன்று விட்டு நஞ்சருந்திய காதலன்!

 நடுவீதியில் யுவதியொருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையை புரிந்த காதலன் நஞ்சருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கல்கத்துவ வெண்டேசிவத்த பகுதியில் நேற்று முன்தினம் (22) இந்த சம்பவம் நடந்தது. காலை 8.30 மணியளவில் சனநெருக்கடியான நேரத்தில் இந்த கோரக்கொலை நடந்தது.

தனது மாமாவுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்த யுவதியே கொல்லப்பட்டுள்ளார்.

அவர் மாதம்பை பகுதியில் உள்ள தனியார் தெங்கு பொருள் உற்பத்தி நிலையமொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். வோகன் ரக காரில் வந்து யுவதியின் பணியிடத்திற்கு அருகில் வீதியோரம் காத்திருந்த இளைஞன், திடீரென காரை இயக்கி மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார். பின்னர் காரிலிருந்து இறங்கி கூரிய ஆயுதத்தால் யுவதியின் கழுத்தை வெட்டியுள்ளார். யுவதி படுகாயத்துடன் வீதியில் துடித்தார்.

பின்னர் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

சுமார் 50 மீற்றர் ஓடிச்சென்று வீதியோர பற்றைக்குள் விழுந்தார். 

அந்த பகுதியில் கூடிய மக்கள் யுவதியையும், இளைஞனையும் மீட்டு சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிறிது நேரத்தில் யுவதி உயிரிழந்தார். இளைஞன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தும்மலசூரிய பகுதியை சேர்ந்த இளைஞனே இந்த கொலையை செய்தார். அவர் வெல்லத் தயாரிப்பு நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். 

இளைஞனும், யுவதியும் சிறிது காலத்தின் முன் காதல் உறவில் இருந்து பிரிந்ததாகவும், இதன் எதிரொலியாகவே கொலை நடந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.