நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,838 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று இதுவரையான காலப்பகுதியில் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்தும் ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சேனபுரா புனர்வாழ்வு நிலைத்தத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை 2537 குணமடைந்துள்ளதுட290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 68 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளத்துடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது