பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 5, 2020

பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா?

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவரே தெரியப்படுத்தியுள்ள நிலையில் இசை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் விட்டு விட்டு வந்தது, அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்தது. இருப்பினும் அது பயப்படும் படியாக இல்லை, டாக்டர்கள் என்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் நான் தான் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி இங்கு வந்தேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் கவனிக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன். எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை. என கூறியுள்ளார்