கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றி பணம்பறிக்கும் பெண்ணுக்கு நேர்ந்த கெதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 31, 2020

கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றி பணம்பறிக்கும் பெண்ணுக்கு நேர்ந்த கெதி!

 கனடா அனுப்பி வைப்பதாக தெரிவித்து பல்வேறு முறைகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

இந்த மோசடிக்குள் சிக்கிக்கொள்ளும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் நிலவும் பணம், ஒன்லைன் முறை மூலம் வேறு கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர மற்றும் கல்குலம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்பவர்கள் 0112 326 979 தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல்களை பெற்றுத் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்….

யாழ், கிளிநொச்சி மக்கள் எந்த தயக்கமும், பயமும் இன்றி மேல் உள்ள இலக்கத்திற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்