இலங்கையில் மஞ்சள் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பேராபத்து! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, August 24, 2020

இலங்கையில் மஞ்சள் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பேராபத்து!இலங்கையில் தற்போது சந்தையில் விற்பனையாகும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமற்றது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் தூள் மாதிரி பெற்றுக்கொண்டு பரிசோதிப்பதற்கு நுகர்வோர் அதிகாகர சபை அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது தொடர்பான ஆய்வு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது.

 அதற்கமைய மஞ்சளில் பல்வேறு நிறங்கள்பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சளுக்கு நிறம் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. புற்றுநோய் மற்றும் ஏற்படவுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன் நுகர்வோருக்கு பொருத்தமற்ற வகையில் மஞ்சள் தயாரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.