கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 24, 2020

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா

மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.

எனினும் குறித்த கைலாசா என்ற தனித்தீவு எந்த இடத்தில் இருக்கின்றது என சரியான தகவல் தெரியாமல் பொலிஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர்.

இதனிடையே  கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். பின்னர், தனிக்கொடி, கடவுச்சீட்டு ஆகியவற்றை உருவாக்கியுள்ளதுடன் கைலாசா நாட்டுக்கான ரிசர்வ் வங்கியும் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.

மேலும், கைலாசா நாட்டுக்கான நாணயங்களையும் விநாயகர் சதுர்த்தியன்று அவர்  வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழில் பொற்காசு என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தனது நாட்டிற்கு வருகை தரும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை  அளிக்கப்படும் என  நித்யானந்தா தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.