கனடாவில் 41 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொரன்ரோவில் உள்ள Sherbourne and Dundas தெருவில் கடந்த புதன்கிழமை இளம்பெண்ணொருவர் கையில் கத்தியுடன் நடந்து செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போது பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பெயர் Tara Morton (41) என தெரியவந்தது.
இதனிடையில் அவரை கொலை செய்த Oleesiea Langdon (24) என்ற பெண் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் Oleesiea Langdon தானாகவே வந்து பொலிசில் சரணடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.