அவுஸ்திரேலியாவில் உயிருக்குப் போராடும் இலங்கை அகதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 19, 2020

அவுஸ்திரேலியாவில் உயிருக்குப் போராடும் இலங்கை அகதி

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணான பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.


இதையடுத்து பிரியா தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள எஸ்.பி.எஸ். தமிழ் செய்தியை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சுமார் 3 வாரகாலமாக கடுமையான சுகவீனமடைந்து இருந்த நிலையிலேயே இன்றைய தினம் மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் தீவில் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும், கடுமையான போராட்டங்களின் பின்னரே அவரை சிகிச்சைக்காக பேர்த் மருத்துவமனக்கு கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் இணங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.