யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் - சொகுசு கார் ஒன்றும் தீயில் எரிந்து நாசம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 17, 2020

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் - சொகுசு கார் ஒன்றும் தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று மாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.