கர்நாடக மாநிலம் தும்குரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ராவ்,. இவரது மனைவி கலாவதி. இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். ராமச்சந்திரராவ் நிகழ்ச்சிஏற்படாளராக பணிபுரிந்து வந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர்.
இந்நிலையில் ராமச்சந்திரராவின் மனைவி கலாவதிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தையை பிரிந்த அவர் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
அவர்கள்குடியிருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சையில் பூரண குணம் அடைந்த மனைவி கலாவதியை வித்தியாசமான முறையில் வரவேற்க முடிவு செய்தார் ராமச்சந்திரராவ்.
இதனையடுத்து கபாலி பட ஸ்டைலில் தான் குடியிருக்கும் பகுதியை அலங்கரித்து சிவப்பு கம்பளத்தை விரித்து, மனைவி மீது மலர் தூய செய்ய பணிபெண்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக செய்திருந்து மனைவியை அசத்தினார்.
இது குறித்து ராமச்சந்திர ராவ் கூறுகையில் நான் தீவிர ரஜினி ரசிகர் தான் அதே நேரத்தில் என்மனைவி எனக்கு முக்கியமானவர் எங்கள் வீடு பத்து நாட்கள் சீல் வைக்கப்பட்டிருந்தது. என்மனைவியை காண ஆவலாக இருந்தேன் என கூறினார்.
மூன்று மாதங்களாக கோவிட் 19 வார்டில்பணிபுரிந்துவந்த நான் மக்கள் வேகமாக குணமடைவதை கண்டு நானும் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருந்தது.வரும் 1-ம் தேதி மீண்டும்பணியில் சேருவேன் என கலாவதி கூறினார்.