பெண் ஒருவருக்கு தனது பிறப்புறுப்பை காண்பித்து பாலியல் சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் வெலிவேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.எம் மகேந்திர ராஜா உத்தரவிட்டுள்ளார்.
வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தார்.
அதன்போது, அவரது உடலில் பூச்சி ஒன்று ஊர்ந்துள்ளதாகவும் இதனால் பதற்றமடைந்த அவர் தனது உடையை (சாரத்துக்குள் நுழைந்ததால்) களைந்துள்ளதாகவும் தெரிவித்த சந்தேக நபரின் சட்டத்தரணி அவ்வகையான பூச்சி ஒன்றை போத்தலில் அடைத்து நீதிமன்றுக் கொண்டு வந்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் நிர்வாணமாக இருந்ததை முறைப்பாட்டாளர் தரப்பினர் தமது கைப்பேசியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிவித்த வெலிவேரிய பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர்இ குறித்த வீடியோ அடங்கிய இறுவட்டு ஒன்றையும் அச்சிடப்பட்ட புகைப்படத்தையும் சான்றுப் பொருளாக நீதிமன்றில் முன்வைத்தார்.
சந்தேகநபர் வேண்டுமென்றே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த சட்டத்தரணிஇ சந்தேகநபருக்கு பிணை கோரியிருந்தார். இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிவான், சந்தேகநபருக்கு பிணை வழங்கியதுடன்இ மீண்டும் ஒக்டோபர் 6 ஆம்திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.