வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து என்.ஐீ.ரி என்ற அநாமதேய அமைப்பு அநாமதேய துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளிலேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகி வருகின்றன.
மேலும் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கு வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனாலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்நிலையிலேயே குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.