கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப்பெறும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.