அமிதாப் பச்சனின் உடல் நிலை கவலைக்கிடம் மகனுக்கும் கொரோனா தாக்கம் என கண்டு பிடிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 12, 2020

அமிதாப் பச்சனின் உடல் நிலை கவலைக்கிடம் மகனுக்கும் கொரோனா தாக்கம் என கண்டு பிடிப்பு

நடிகர் அமிதாப் பச்சம் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சற்று முன்னர் அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  இரண்டாம் தடவையும் கொரோனா பரிசோதனை ஒன்று இன்று(சனி) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில். அதன் முடிவுகள் நாளை(ஞாயிறு) வெளியாகும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக அமிதாப் பச்சனுக்கு இருமல் இருந்துள்ளது. ஆனால் இதனை அவர் சரியாக கவனிக்கவில்லை என்றும். அவர்கள் இது கொரோனாவாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துவிட்டார்கள்.
ஆனால் நிலமை சற்று மோசமானதை அடுத்தே அமிதாப் பச்சன் வைத்தியசாலை சென்றுள்ள நிலையில். அவரது மகன் அபிஷேக் பச்சன்(44) க்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அமிதாப் பச்சனின் வயது 77 ஆகும். அவர் மீண்டும் வர நாமும் பிரார்த்திப்போம்.
இதேவேளை ஐஸ்வர்யா ராயுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.