தமிழர்களிற்கு வாழ்வுரிமையே இல்லை… உங்கள் கட்சி உறுப்புரிமையை வைத்து என்ன செய்வது?: தந்தை செல்வா சதுக்கத்தில் மகளிரணி ஆவேசம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 9, 2020

தமிழர்களிற்கு வாழ்வுரிமையே இல்லை… உங்கள் கட்சி உறுப்புரிமையை வைத்து என்ன செய்வது?: தந்தை செல்வா சதுக்கத்தில் மகளிரணி ஆவேசம்!நாங்கள் வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சி உறுப்புறுரிமை இருந்தென்ன, இல்லாமல் போனாலென்ன. இந்த உறுப்புரிமையை வைத்துக் கொண்டு இதுவரை என்ன செய்தார்கள். எமது போட்டம் தமிழ்அரசு கட்சிக்கு எதிரானதல்ல. அதை நல்வழிப்படுத்தவே என மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார், அண்மையில் தமிழ் அரசு கட்சியிலிருந்த நீக்கப்பட்ட மகளிரணியின் முன்னாள் செயலாளர் சி.விமலேஸ்வரி.

இன்று காலையில் தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,என்னை கட்சியை விட்டு நீக்கியதால் எந்த வருத்தமும் இல்லை. எனது நோக்கமெல்லாம், தந்தை செல்வா. அமிர்தலிங்கம், நாகநாதன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடாது. அதற்காகவே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

நாம் இருக்கின்ற இடம் தூய்மையாக இருக்க வேண்டும், வளர்க்கின்ற மரம் செழிப்பாக இருக்க வேண்டும், கொள்கைகள் நேர்மையாக இருக்க வேண்டும், எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம்.

இந்த நேரத்தில் ஏன் இந்த விடயங்களை பேசுகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். களை பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு. நெல் விதைத்த பின்னரே களை பிடுங்குவார்கள். நெல் வெட்டும்போது களை பிடுங்குவதில்லை. உண்மையான களைகளை அகற்ற தேர்தல் காலமே பொருத்தமானது. நச்சு செடிகளையும், களைகளையும் அகற்றி விட்டால், வீட்டை சுத்தப்படுத்தி விட்டால் பிரச்சனைகள் இருக்காது.நாங்கள் வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சி உறுப்புறுரிமை இருந்தென்ன, இல்லாமல் போனாலென்ன. இந்த உறுப்புரிமையை வைத்துக் கொண்டு இதுவரை என்ன செய்தார்கள். எமது போட்டம் தமிழ்அரசு கட்சிக்கு எதிரானதல்ல. அதை நல்வழிப்படுத்தவே என்றார்.