சவுதிஅரேபியாவில் இருந்து திரும்பிய மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, July 9, 2020

சவுதிஅரேபியாவில் இருந்து திரும்பிய மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.


சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 9 பேருக்கு இவ்வாறு சற்று முன்னதாக தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மூவருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது.


இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.