கொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 27, 2020

கொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள்கொழும்பில் மேலதிக வகுப்பு நடத்து நோக்கில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரால் 16 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 3 மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக வகுப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடும் சந்தே நபர் அதன் ஊடக அடையாளம் காணும் மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டில் பல மாணவர்களை அவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆசிரியரின் வீட்டில் மீட்கப்பட்ட பல புகைப்படங்கள் துஷ்பிரயோகத்தின் போது எடுக்கப்பபட்டதாகும். இவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்