யாழ்.வடமராட்சி – புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வர்த்தக நிலையம் ஒன்று ரவுடிகளால் உடைக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏற்கனவே பகைமை கொண்ட இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது- 22) புவனேஸ்வரன் குகராஜ் (வயது- 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நேற்றிரவு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டது.