வீடென்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக்குழு வந்த ஆசை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 18, 2020

வீடென்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக்குழு வந்த ஆசை


வவுனியா- கூமாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டின் மீது தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்த விலையுயர்ந்த இரு வளர்ப்பு நாய்களை களவாடி சென்றுள்ளனர்.

அதிகாலையில் இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வாள்கள், கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார்சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவினர் மறைகாணி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.