கொரோனாவை கட்டுப்படுத்த ஆனையிறவில் ஆயுதங்களுடன் இராணுவத்தை குவித்த நாடுதான் இலங்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 28, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த ஆனையிறவில் ஆயுதங்களுடன் இராணுவத்தை குவித்த நாடுதான் இலங்கை!

இராணுவ மயமாக்கல் மூலம் ஜனாதிபதி கோத்தபாய தமிழர்களை முடக்க நினைக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் இன்று இளைஞர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,




தமிழர்களாகிய இந்த மண்ணிலே 70ஆண்டுகளாக எமது உரிமைகளுக்காக போராடி வருகிறோம். தந்தை செல்வா தலைமையில் அகிம்சை ரீதியிலும் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுத ரீதியாகவும் தமிழர்கள் போராடியிருக்கிறோம். தமிழர்களை ஆயுத ரீதியாக தோற்கடித்த மமதையில் 3 ஆவது தடவையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கனவு கண்ட மகிந்த ராஜபக்சவை தமிழர்களே தோற்கடித்தனர்.

அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரனான கோத்தபாய ராஜபக்ச தனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றி பெற்ற மமதையுடன் பாராளுமன்ற தேர்தலில் பிரதான செய்தியாக அரச தரப்பு கூறிவருகிறது 19 ஆவது அரசியலமைப்பை நீக்குவதாக. அவ்வாறு 19 ஆவது அரசியலமைப்பை நீக்கினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது போகும். அவ்வாறு நீக்கிவிட்டு அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு தலைவர்களாக ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள்.

தமிழர் தேசங்களில் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கொரோனா வைரஸை தடுப்பதற்காக ஆனையிறவில் ஆயுதங்களை பொருத்திய நாடு இலங்கையே எனவும் மேலும் குறிப்பிட்டார்.



குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சார்பில், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுகிர்தன் கலந்து கொண்டார்.