தொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறாக இருந்து, அவர்களிடமிருந்த பெருந்தொகை பணத்தை கறந்த வந்த இளம் யுவதியை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
தேயிலை ஏற்றுமதி வர்த்தகர் ஒருவருடன் தவறாக இருந்து, இதை இரகசியமாக படம் பிடித்து, 10 மில்லியன் ரூபா பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலையை சேர்ந்த 24 வயதான இளம் யுவதியே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொடல் அழகியான அவர், கடந்த சில காலமாக கொழும்பிலுள்ள பல முன்னணி தொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி பெருந்தொகை பணத்தை கறந்திருந்தது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதிக பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசையில் அவர் ஒரே சமயத்தில் பல தொழிலதிபர்களுடன் தவறாக இருந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர்களுடன் களியாட்ட நிகழ்வுகளிற்கு செல்வது, மது விருந்துகளில் பங்கெடுப்பது என உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
இறுதியாக, கொழும்பிலுள்ள தேயிலை ஏற்றுமதி செய்யும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதான வர்த்தகரும், மொடல் அழகியும் கொழும்பில் உள்ள இரவு களியாட்ட விடுதிகள் மற்றும் 5 நட்சத்திர ஹொட்டல்களில் தவறாக இருந்துள்ளனர்.
இதன்போது, பெருந்தொகை பணத்தை அவரிடமிருந்து கறந்துள்ளார்.
நிறுவனத்தின் விளம்பரத்துறையிலும் மொடல் அழகியை அவர் இணைத்திருந்தார்.
பிலியந்தலையிலிருந்து கொழும்பிற்கு இடம்மாறி, மாதாந்தம் 35,000 ரூபா வாடகை செலுத்தி வீடொன்றையும் பெற்றுள்ளார்.
வர்த்தகரின் மகளின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவரிடம் 10 மில்லியன் ரூபா பணத்தை மொடல் அழகி கோரியுள்ளார். எனினும், வர்த்தகம் அதை மறுத்தபோது, அவர்களிற்குள் முரண்பாடு எழுந்தது.
இருவரும் தவறாக இருந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அவற்றை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். வர்த்தகரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில், அவர் பொலிசாரிடம் முறையிட்டார்.
மொடல் அழகியின் வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து 4 கையடக்க தொலைபேசிகள், 3 மடிக்கணிணிகளை மீட்டனர்.
அவற்றை பரிசோதித்தபோது, பல முன்னணி வர்த்தகர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பல சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.