காணாமல் போனவர்கள் எப்படி கொல்லப்பட்டனர்?: இராணுவத்தளபதியின் தொண்டையை பிடிக்கும் சுரேஷ்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 28, 2020

காணாமல் போனவர்கள் எப்படி கொல்லப்பட்டனர்?: இராணுவத்தளபதியின் தொண்டையை பிடிக்கும் சுரேஷ்!

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்ற போது கூட ஓர் இரு விடையங்களை அவர் சொல்லி இருக்கின்றார். ஒன்று நாங்கள் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம். தொடர்ச்சியாக இங்கு இருக்கக்கூடிய மக்களுடைய காணிகள் முப்படையினருடைய வசம் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய இருப்பை குறைத்தால் மாத்திரம்தான் காணிகளை விடுவிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருக்கின்றது.

ஆகவே அது ஒரு முக்கியமான விடையம் ஆனால் இராணுவத்தினர் பத்து வருடம் முடிந்துவிட்ட பின்பு கூட வடக்கு மாகாணத்தில் எந்தவிதமான தேசிய பாதுகாப்புக்கான குந்தகமான சூழ்நிலையும் இல்லாதபோதும் இன்னும் சொல்ல போனால் தென்மாகாணங்கள் மிக மோசமான அங்கு துப்பாக்கிச்சூடு இடம்பெறுகின்றன, அண்டவேல்ட் விடையங்கள் மிக தாராளமாக இடம்பெறுகின்றது. காலி கடலிலும், கொழும்பு கடலிலும் கிலோ கணக்கான போதைவஸ்துகள் கடத்தப்பட்டு வருகின்றது.

ஆகவே இராணுவத்தினர் குவிக்கப்பட வேண்டிய இடமாக கொழும்பும், காலியும், மாத்தறையும் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்கள் இருக்கக் கூடியதாக அவர்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவத்தினரை கொண்டு குவித்து வைத்திருப்பது என்பது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஒரு அடக்கு முறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களுடைய சிந்தனையின் வெளிப்படையாகத்தான் இருக்கின்றது.ஆகவே அவர் யார் என்ன சொன்னாலும் நாங்கள் வடக்கை விட்டு இராணுவத்தினரை அகற்ற மாட்டோம் என்று கூறுவது ஒரு ஏற்புடைய செயலாக நிச்சயமாக இல்லை.

தேவைக்கு மேலதிகமான இராணுவத்தினர் குறைக்கப்படலாம் அதனூடாக தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான ஜனநாயக சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ன காரனத்திற்காக தொடர்ச்சியாக இவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ அடிமைத்தனத்துக்குள் வைத்த்திருக்க வேண்டும் என்பதற்கு நிச்சயமாக இவர்களிடம் பதில் இல்லை.வடக்கு மாகாணம் என்பது வாள் வெட்டு என சிறிய சிறிய விடயத்தை தவிர இது ஒரு அமைதியான பிரதேசமாக இருக்கின்றது. பொலிஸார் மனம் வைத்தால் இந்த வாள்வெட்டு கும்பலை இல்லாது செய்ய முடியும். அதே போல கஞ்சா கடத்தல் போன்ற விடயங்களை நிறுத்த முடியும்.

இதற்கெல்லாம் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்ற தேவைகள் நிச்சயமாக இல்லை என்பதை சவேந்திர சில்வா அவர்களுக்கு நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே இந்த நிலைமைகள் வக்கு மாகாணத்தில் மாற்றமடைய வேண்டும் அல்லாதுவிட்டால் நிச்சயமாக இவர்கள் தாங்களாகவே தமிழ் மக்களை அது ஒரு ஜனநாயக போராட்டமோ ஏதோ ஒரு விதத்தில் போராட்டத்திற்கு இவர்கள் மக்களை தொடர்ந்து தள்ளக்கூடாது.ஜே.ஆ.ஜெயவர்த்தன ஆட்சியிலும் அடக்குமுறைகள்தான் மக்களை போராட்ட களங்களுக்கு தள்ளுகின்றன என்பதை தயவு செய்து இந்த இராணுவ உயர் அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இப்போது இவர்கள் எடுத்திருக்கக் கூடிய முடிவுகள் என்பது ஏற்புடைய முடிவுகளாக தெரியவில்லை.

அதே போலதான் சவேந்திர சில்வா இன்னுமொரு விடையத்தையும் கூறி இருக்கின்றார் காணாமல் போனவர்கள் என்பவர்கள் கொல்லப்பட்டிருப்பார்களோ அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என அவர் கூறுகின்றார்.

ஒரு விடயத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார் அதாவது சரனடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்னால் சரனடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரனடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்ட்டார்கள் என்று கூறினால் எவ்வாவாறு இறந்து போனார்கள் கொலைசெய்யப் பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்? அல்லது நூற்றுக்கணக்கா, ஆயிரக்கணக்கா அவர்கள் இறந்திருப்பதாக எந்தவித காரணங்களும் நிச்சயமாக கிடையாது.

ஆகவே ஒரு இராணுவ தாக்குதலின் போது, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு என்பதுக்கு அப்பால் ஒரு அரசாங்கத்திடம் அரனடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படையாக சொல்லவேண்டும் அவ்வாறு சொல்ல தகுதியற்ற அரசாங்கமாக அது இருக்குமாயின் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறதென்பது அப்பட்டமான வெளிப்படையான ஒரு விடையமாக நிச்சயமாக இருக்கும்.

ஆகவே இராணுவத் தளபதி சொன்னது உண்மையாக இருந்தால் அரசாங்கம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது சொல்லப்படவேண்டு இல்லை என்றால் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு அந்த விசாரணைக்கு அவர்கள் தங்களை தாங்களே உட்படுத்தவேண்டும். இவ்வாறான விடையங்கள் நடந்தால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கான குறைந்தபச்ச நீதியாவது கிடைக்குமென நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.