மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு: கொலையா என சந்தேகம்….! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 28, 2020

மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு: கொலையா என சந்தேகம்….!

மட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவம் இன்று காலை களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரான துர்க்கா என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பெலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்